search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    முன்பதிவில் புது மைல்கல் எட்டிய மஹந்திரா எலெக்ட்ரிக் கார்
    X

    முன்பதிவில் புது மைல்கல் எட்டிய மஹந்திரா எலெக்ட்ரிக் கார்

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 மாடல் முழு சார்ஜ் செய்தால் 456 கிமீ வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
    • புது எலெக்ட்ரிக் கார் வினியோகத்தில் டாப் எண்ட் EL வேரியண்டிற்கு முன்னுரிமை வழங்க மஹிந்திரா முடிவு.

    மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு ஜனவரி 26 ஆம் தேதி துவங்கியது. இந்த நிலையில், புது XUV400 மாடல் முன்பதிவில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் 12 மாதங்களில் மஹிந்திரா நிறுவனம் 20 ஆயிரம் XUV400 யூனிட்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    தற்போது இந்த காருக்கான காத்திருப்பு காலம் ஏழு மாதங்களாக இருக்கிறது. மேலும் வினியோகத்தை பொருத்தவரை XUV400 டாப் எண்ட் மாடல் EL வேரியண்டிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி-இன் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் டாடா நெக்சான் EV, எம்ஜி ZS EV மற்றும் பிஒய்டி அட்டோ 3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய மஹிந்திரா XUV400 EC வேரியண்ட் 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் AC சார்ஜர் வங்கப்படுகிறது. இதன் EL வேரியண்ட் உடன் 7.2 கிலோவாட் AC சார்ஜர் மட்டுமே வழங்கப்படுகிறது.

    பேட்டரியை பொருத்தவரை மஹிந்திரா XUV400 மாடலில் 39.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 456 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்றுள்ளது. இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 18. லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×