search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஹிலக்ஸ் மாடல் இங்க மட்டும் ஒரு யூனிட் கூட விற்பனையாகல - ஏன் தெரியுமா?
    X

    ஹிலக்ஸ் மாடல் இங்க மட்டும் ஒரு யூனிட் கூட விற்பனையாகல - ஏன் தெரியுமா?

    • டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் டிர்க் மாடல் இந்திய சந்தையில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • ஒரு இந்திய மாநிலத்தில் மட்டும் டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்தியாவில் விற்பனைக்கு வந்ததில் இருந்தே ஹிலக்ஸ் மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனினும், டொயோட்டா நிறுவனம் கேரளா மாநிலத்தில் மட்டும் இதுவரை ஹிவக்ஸ் மாடலின் ஒரு யூனிட்டை கூட விற்பனை செய்ய முடியவில்லை.

    மாடிபை செய்யப்பட்ட வாகனங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக கேரளா விளங்குகிறது. எனினும், இந்த மாநிலத்தில் விதிமுறைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக கேரளா மாநில மோட்டார் வாகன துறை விதிகளை கடுமையாக பின்பற்றுகிறது. பல்வேறு விதிமுறைகளில் சில தேவையற்றதாகவும் பார்க்கப்படுகிறது. எனினும், கேரளா மோட்டார் வாகன துறை விதிகளில் எவ்வித சமரசமும் செய்வதில்லை.

    இந்தியாவில் பிக்கப் டிரக் வாகனங்களை தனியார் வாகனங்களாக பதிவு செய்யும் வழக்கம் நடைமுறையில் இல்லை. மேலும் இத்தகைய வாகனங்களில் ஒரு டன் எடையை சுமக்கும் திறன் இருப்பின், அவற்றை நிச்சயம் தனியார் வாகனமாக பதிவு செய்ய முடியாது. இதன் காரணமாகவே ஏராளமான மஹிந்திரா பொலிரோ கேம்ப்பர் பிக்கப் எஸ்யுவிக்கள் தனியார் வாகனமாக பதிவு செய்யப்படுவதில்லை.

    டொயோட்டா ஹிலக்ஸ் மாடலுக்கு நேரடி போட்டியாக இசுசு நிறுவனத்தின் வி கிராஸ் பிக்கப் எஸ்யுவி விளங்குகிறது. இந்த மாடலை இந்தியாவில் தனியார் வாகனமாக பதிவு செய்ய முடியும். இதையொட்டி கேரளா மோட்டார் வாகன துறை இசுசு நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக கூறிவிட முடியாது. ஏனெனில், இசுசு நிறுவனம் மோட்டார் வாகன துறை விதிகளுக்கு ஏற்ற வகையில் தனது வி கிராஸ் மாடலின் திறனை 215 கிலோவாக நிர்ணயம் செய்துள்ளது.

    இதன் காரணமாக இசுசு வி கிராஸ் மாடலை இந்தியாவில் தனியார் வாகனமாக பதிவு செய்து பயன்படுத்த முடியும். இதற்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது. இந்திய சந்தையில் டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் டிரக் விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சமாக டாப் எண்ட் மாடல் விலை ரூ. 36 லட்சத்து 80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×