search icon
என் மலர்tooltip icon

    பைக்

    இணையத்தில் வெளியான ஹோண்டா ஆக்டிவா 125 புது மாடல் விவரங்கள்
    X

    இணையத்தில் வெளியான ஹோண்டா ஆக்டிவா 125 புது மாடல் விவரங்கள்

    • ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது புதிய ஆக்டிவா 125 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய ஆக்டிவா 125 மாடல் ஸ்மார்ட் கி அன்லாக் உள்பட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்ர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் புது வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஆக்டிவா 125 மாடல் விவரங்கள் ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய வேரியண்ட் ஆக்டிவா 125 H ஸ்மார்ட் என்று அழைக்கப்பட இருக்கிறது.

    புதிய வேரியண்ட்-இல் குறிப்பிடத்தக்க மாற்றமாக அதன் ஸ்மார்ட் கீ இருக்கும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட் அன்லாக் வசதி வழங்கப்பட உள்ளது. இது ஸ்கூட்டர் மற்றும் அதன் ஃபியூவல் லிட்-ஐ அதிகபட்சம் 2 மீட்டர் தொலைவில் இருந்தபடி லாக் / அன்லாக் செய்ய அனுமதிக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் ஃபைண்ட் அம்சம் ஸ்கூட்டர் பார்கிங்கில் கண்டறிய ஏதுவாக இண்டிகேட்டர்களை இயக்குகிறது.

    இதுதவிர ஸ்மார்ட் ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை புஷ் பட்டன் மூலம் ஸ்டார்ட் செய்துவிடுகிறது. இத்துடன் வழங்கப்படும் ஸ்மார்ட் சேஃப் அம்சம் ஸ்கூட்டரை விட 2 மீட்டர்கள் தொலைவுக்கு சென்றதும், ஸ்கூட்டரை லாக் செய்துவிடும். இதுதவிர எல்இடி ஹெட்லைட், சைடு ஸ்டாண்ட் கட் ஆஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஆக்டிவா 125 H ஸ்மார்ட் டிசைன் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது. அதன்படி புதிய மாடலின் ஹெட்லைட், இண்டிகேட்டர் மற்றும் க்ரோம் பிட் உள்ளிட்டவை எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படுகிறது. சிங்கில் பீஸ் சீட் மற்றும் கிராப் ரெயில் உடன் பக்கவாட்டு பேனல்களும் மாற்றமின்றி வழங்கப்படுகிறது.

    புதிய மாடலிலும் 124சிசி, சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. இது 8.18 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்ட் மற்றும் ஐடில் ஸ்டாப் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×