search icon
என் மலர்tooltip icon

    கார்

    இணையத்தில் வெளியான டாடா பன்ச் EV ப்ரோடக்ஷன் ரெண்டர்!
    X

    இணையத்தில் வெளியான டாடா பன்ச் EV ப்ரோடக்ஷன் ரெண்டர்!

    • டாடா பன்ச் மாடல் விரைவில் எலெக்ட்ரிக் வடிவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை மெல்ல வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க தொடங்குகிறது. தற்போது இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 75 சதவீத பங்குகளுடன் முன்னணி இடத்தில் உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் மற்ற நிறுவனங்கள் கால்பதிக்க டாடா நிறுவனமும் காரணமாக இருந்து வந்துள்ளது.

    சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க துவங்கி இருக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் அடுத்த எலெக்ட்ரிக் கார் டாடா பன்ச் EV என்றே கூறலாம். இந்த காரின் ப்ரோடக்ஷன் ரெண்டர்கள் வெளியாகி உள்ளன.

    இந்திய சந்தையில் அதிக பிரபலமாக இருந்து வரும் டாடா பன்ச் மாடல் விரைவில் எலெக்ட்ரிக் வடிவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. முன்னதாக இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

    அதன்படி இந்த காரின் முன்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டிஆர்எல் பொனெட் லைனின் கீழ் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த காரின் கிரில் பகுதி ரிடிசைன் செய்யப்பட்டு, முழுமையாக பிளான்க்டு ஆஃப் செய்யப்பட்டு EV பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. காரின் பின்புறம் ரியர் வைப்பர், ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், எல்இடி டிரை-ஏரோ டெயில் லைட்கள் உள்ளன.

    பவர்டிரெயின் மற்றும் அம்சங்களின் படி பன்ச் EV மாடல் டியாகோ EV மாடலின் மேல் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. விலையை பொருத்தவரை டாடா பன்ச் EV மாடல் ரூ. 9 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×