search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இணையத்தில் லீக் ஆன 2023 ஹூண்டாய் வென்யூ விரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன 2023 ஹூண்டாய் வென்யூ விரங்கள்

    • ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 2023 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது வென்யூ மாடலில் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் 2023 வென்யூ மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்று இல்லாமல், இது வருடாந்திர அப்டேட் ஆக இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில் புது ஹூண்டாய் எஸ்யுவி அம்சங்கள் சற்றே மாற்றப்பட்டு இருக்கும்.

    புது மாடல் குறித்து லீக் ஆகி இருக்கும் தகவல்களில் 2023 ஹூண்டாய் வென்யூ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இது 113 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புது ஹூண்டாய் வென்யூ மாடல் - S+, SX மற்றும் SX(O) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

    2023 அப்டேட்டை தொடர்ந்து முன்னதாக S பேஸ் வேரியண்ட் டீசல் மாடலில் உள்ள சில அம்சங்கள், டாப் எண்ட் SX வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கார்னெரிங் லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பக்கவாட்டு ஏர்பேக் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் ரிக்லைனிங் ரியர் சீட்கள், ரியர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்டவை டாப் எண்ட் SX(O) மாடலில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல் வேரியண்ட்களில் பக்கவாட்டு ஏர்பேக் மிட் வேரியண்ட் ஆன S (O)-வில் மட்டுமே வழங்கப்படுகிறது. புது வென்யூ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்கள் வழங்கப்படுகிறது. இவற்றின் செயல்திறன் அளவுகளில் எந்த விதமான மாற்றங்களும் இருக்காது என்றே தெரிகிறது.

    வரும் வாரங்களில் புதிய 2023 ஹூண்டாய் வென்யூ மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை ஓரளவு அதிகமாகவே இருக்கும்.

    Next Story
    ×