search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    முழு சார்ஜ் செய்தால் 614 கிமீ ரேன்ஜ் - விரைவில் வெளியாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்
    X

    முழு சார்ஜ் செய்தால் 614 கிமீ ரேன்ஜ் - விரைவில் வெளியாகும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்

    • ஹூண்டாய் நிறுவனம் தனது ஐயோனிக் சீரிசில் புது எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தியது.
    • இந்த எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாக டீசர்கள் வடிவில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    ஹூண்டாய் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் முற்றிலும் புதிய ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரை சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தி இருந்தது. நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் செடான் மாடலான ஐயோனிக் 6 ஸ்வூபிங் ரூப்லைன் கொண்டிருக்கிறது. காரை காட்சிப்படுத்தியதோடு ஐயோனிக் 6 அம்சங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் புதிய ஐயோனிக் 6 மாடலில் 77.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதன் 2WD வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 614 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் 18 இன்ச் மற்றும் 20 இன்ச் என இருவித வீல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 20 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 545 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    ஹூண்டாய் ஐயோனிக் 6 AWD வேரியண்ட் (20 இன்ச் வீல்) முழு சார்ஜ் செய்தால் 583 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் 20 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் 519 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் பேஸ் வேரியண்டில் 53 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதன் 18 இன்ச் வீல் கொண்ட வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 429 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.

    சார்ஜிங்கை பொருத்தவரை ஹூண்டாய் ஐயோனிக் 6 மாடலை 800 வோல்ட் அல்ட்ரா பாஸ்ட் சார்ஜர் கொண்டு 10 இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களே ஆகும். புதிய ஐயோனிக் 6 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், ஹூண்டாய் நிறுவனம் விரைவில் ஐயோனிக் 5 கிராஸ் ஒவர் மாடலை வரும் மாதங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    Next Story
    ×