search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    டூயல் டோன் ஆப்ஷனில் அறிமுகமான சுசுகி அக்சஸ் 125
    X

    டூயல் டோன் ஆப்ஷனில் அறிமுகமான சுசுகி அக்சஸ் 125

    • சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் அக்சஸ் 125 ஸ்கூட்டரை புதிய நிறங்களில் அறிமுகம் செய்தது.
    • அந்த வகையில் அக்சஸ் 125 மாடல் தற்போது டூயல் டோன் நிற ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது அக்சஸ் 125 ஸ்கூட்டரின் டூயல் டோன் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் சுசுகி அக்சஸ் 125 சாலிட் ஐஸ் கிரீன் / பியல் மிரேஜ் வைட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. புதிய டூயல் டோன் ஆப்ஷன் சுசுகி அக்சஸ் 125 ரைடு கனெக்ட் மற்றும் ஸ்பெஷல் எடிஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    முன்னதாக சுசுகி அக்சஸ் 125 மாடல் மெட்டாலிக் ராயல் பிரான்ஸ், பியல் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் பிளாக், மெட்டாலிக் மேட் போர்டௌக்ஸ் ரெட், பியர் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர். பியர் மிரேஜ் வைட் மற்றும் மெட்டாலிக் டார்க் கிரீனிஷ் புளூ போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வரிசையில் தான் தற்போது டூயல் டோன் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    சுசுகி அக்சஸ் 125 ரைடு கனெக்ட் எடிஷனில் ப்ளூடூத் சார்ந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அழைப்புகள், அதிவேக எச்சரிக்கை, போன் பேட்டரி நிலை, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் அலெர்ட், மிஸ்டு கால் என ஏராளமான விவரங்களை காண்பிக்கிறது.

    இந்த ஸ்கூட்டரில் வெளிப்புறம் பியூல் லிட், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பொசிஷன் லைட்கள், யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய சுசுகி அக்சஸ் 125 டூயல் டோன் விலை ரூ. 85 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×