search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பி.சி.சி.ஐ. தலைவர் தேர்தல்- கங்குலிக்கு பதில் ரோஜர் பின்னி போட்டியிட உள்ளதாக தகவல்
    X

    சவுரவ் கங்குலி, ரோஜர் பின்னி

    பி.சி.சி.ஐ. தலைவர் தேர்தல்- கங்குலிக்கு பதில் ரோஜர் பின்னி போட்டியிட உள்ளதாக தகவல்

    • 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஜர் பின்னி இடம் பெற்றார்.
    • பி.சி.சி.ஐ. செயலாளர் பதவிக்கு மீண்டும் ஜெய்ஷா போட்டியிட முடிவு.

    மும்பை:

    பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால் அந்த பதவிகளுக்கான தேர்தல் பணிளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவோர் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும் மனுக்கள் மீதான பரிசீலனை 13 ஆம் தேதி நடைபெறு என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    வேட்பாளர்கள் தங்களது மனுக்களை அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம். என்றும் அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்த முறை கங்குலி போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிட ஜெய்ஷா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கான தேர்தலில் கங்குலி போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் ரோஜர் பின்னியின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும் பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    முன்னாள் மித வேகப்பந்து வீச்சாளரான ரோஜர் பின்னி, 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றவர். பின்னி தற்போது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தில் அலுவலக பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

    Next Story
    ×