search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் பிரீமியர் லீக் பைனலுக்கு முன்னேறுவது யார்? 183 ரன் இலக்கை எட்ட போராடும் உ.பி. வாரியர்ஸ்
    X

    கிரண் நவ்கிரே

    மகளிர் பிரீமியர் லீக் பைனலுக்கு முன்னேறுவது யார்? 183 ரன் இலக்கை எட்ட போராடும் உ.பி. வாரியர்ஸ்

    • அதிரடியாக ஆடிய மும்பை அணி வீராங்கனை நாட் ஷிவர் பிரன்ட் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் விளாசினார்.
    • உ.பி. வாரியர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்று வரும் முதலாவது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போடடிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் டெல்லி அணியுடன் மோதும் அணியை முடிவு செய்வதற்கான எலிமினெட்டர் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி டெல்லி அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

    எலிமினேட்டர் சுற்று போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நாட் ஷிவர் பிரன்ட் 72 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.

    இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டாப் ஆர்டர் வீராங்கனைகள் விரைவில் ஆட்டமிழந்தனர். 56 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. குறிப்பாக கிரண் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

    Next Story
    ×