search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.
    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் பாலாபிஷேகம்.

    இன்று வைகாசி விசாகம். நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி ரதோற்சவம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் பாலாபிஷேகம். காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் காலை கருட வாகனத்தில் புறப்பாடு. அரியக்குடி ஸ்ரீசீனிவாசப் பெருமாள் வெள்ளி மஞ்சத்தில் பவனி. பழனி ஆண்டவர் ரதோற்சவம். திருப்பத்தூர் சிவபெருமான் மின்விளக்கு அலங்காரத்துடன் தெப்போற்சவம் ஸ்ரீநம்மாழ்வார் திருநட்சத்திர வைபவம். ராமேசுவரம் பர்வத்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, வைகாசி-19 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி காலை 11.44 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: சுவாதி காலை 5.54 மணி வரை. பிறகு விசாகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-நலம்

    கடகம்-சுகம்

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- செல்வாக்கு

    மகரம்-அன்பு

    கும்பம்-சுபம்

    மீனம்-மேன்மை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×