search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகள் மீது அதிக எதிர்பார்ப்புகளை திணிக்கும் பெற்றோர்..
    X

    குழந்தைகள் மீது அதிக எதிர்பார்ப்புகளை திணிக்கும் பெற்றோர்..

    • சர்வாதிகார பெற்றோர் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள்.
    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைப்பார்கள்.

    மிகவும் கண்டிப்பான பெற்றோர் அல்லது சர்வாதிகார பெற்றோர் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்பிக்க பொய்யர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு. இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிகமான வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவனிடமும் சர்வாதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.

    அதிகார பெற்றோர்: நாம் முன்னர் கண்ட சர்வாதிகார பெற்றோருக்கும் இந்த வகை பெற்றோருக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வகையில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைப்பார்கள். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை செட் செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல தூண்டுவார்கள். சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை தண்டிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திப்பார்கள்.

    எப்போதும் குழந்தைகளின் மதிப்புகளையும் உணர்வுகளையும் இவர்கள் மதிப்பார்கள். இதனால் இந்த வகையில் உள்ள பெற்றோர் குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும் அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக இவர்கள் இருப்பதுண்டு.

    Next Story
    ×