search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இடுப்பு வலி, முதுகு வலியை குணமாக்கும் முதுகுத்தண்டு முத்திரை
    X

    இடுப்பு வலி, முதுகு வலியை குணமாக்கும் முதுகுத்தண்டு முத்திரை

    • இடுப்பு வலி குறைய மற்றும் வராமல் தடுக்க இந்த முத்திரையை செய்யலாம்.
    • இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    செய்முறை:

    இடது கை: கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் ஆகியவற்றை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு- சின் முத்திரை. மற்ற விரல்கள் நேராக சேர்ந்து இருக்கட்டும்.

    வலது கை: சுண்டுவிரல் மற்றும் நடுவிரல் நுனிகளைக் கட்டை விரல் நுனியால் தொடவும். வலதுகையின் மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். நாற்காலியில் அமர்ந்தும் இந்த முத்திரையை செய்யலாம். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். இதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்:

    முதுகு வலி நரம்புக் கோளாறுகள் குறையும். ஈரத்தில் வேலை செய்வோர், உட்கார்ந்தே வேலை செய்வோர், இடுப்பு வலி குறைய மற்றும் வராமல் தடுக்க இந்த முத்திரையை செய்யலாம். எலும்புகளின் சவ்வு விலகுதல், முதுகில் ஏற்படும் தசைப்பிடிப்பு, இடுப்பு வலி, உச்சந்தலையில் பிடிப்பது போன்ற வலி சரியாகும். அடிமுதுகு, தொடை, மூட்டு வலி, ஆகியவை சரியாக , இடுப்பு எலும்புத்தசை பலப்பட, பிரசவத்திற்கு பின்னர், இடுப்பு எலும்புகள் நல்ல நிலைக்கு திரும்பும்.

    Next Story
    ×