search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    கோதுமை ரவையில் சூப்பரான பாயாசம் செய்யலாம் வாங்க...
    X

    கோதுமை ரவையில் சூப்பரான பாயாசம் செய்யலாம் வாங்க...

    • கோதுமை ரவை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
    • கோதுமை ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1/4 கப்

    வெல்லம் - 1/2 கப்

    பால் - 1 கப்

    உப்பு - 1 சிட்டிகை

    நெய் - 1 தேக்கரண்டி

    முந்திரிப்பருப்பு - தேவையான அளவு

    ஏலக்காய் - 1

    செய்முறை

    குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    அதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

    அடுத்து அதில் கப் - 1 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.

    கோதுமை ரவை மிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெல்லம் நன்றாக கரைந்ததும் வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.

    குறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.

    பாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும்.

    ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும்.

    அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை அணைக்கவும்.

    இப்போது சூப்பரான கோதுமை ரவை பாயாசம் ரெடி.

    தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.

    பாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    https://www.maalaimalar.com/cinema

    Next Story
    ×