search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பருவம் அடைந்த பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும்... நிரந்தர தீர்வும்...
    X

    பருவம் அடைந்த பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும்... நிரந்தர தீர்வும்...

    • ஒருசில பெண்கள் தொடர்ச்சியாக இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
    • இது ஒரு சில பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் தொற்றினால் ஏற்படலாம்.

    பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக பருவம் அடைந்த பெண்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை வெள்ளைப்படுதல் ஆகும். மாதவிடாய்க்கு முன்னரும், கருவுறும் காலத்திலும் வெள்ளைப்படுதல் என்பது இயல்பான ஒரு நிகழ்வு. ஆனால் ஒருசில பெண்கள் தொடர்ச்சியாக இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு சில பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் தொற்றினால் ஏற்படலாம். ஏனெனில் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும்போது பிறப்புறுப்பு தொற்று நாய் ஏற்பட வழிவகுக்கும்.

    இதனால் இடுப்பு வலி, சோர்வு, சிறுநீர் பாதை தொற்று, அடிவயிற்றில் வலி, அதிகரித்த உடல் சூடு போன்றவை ஏற்படும். குமரி என்று அழைக்கப்படும் கற்றாழை வெள்ளைப்படுதலுக்கு மிகச்சிறந்த மருந்து ஆகும். கற்றாழையின் தோல்சீவி அதன் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாக கழுவி பழச்சாறு போல அரைத்து குடித்து வரலாம். மதிய உணவில் மோர் சேர்த்து வரலாம்.

    மேலும் வெந்தயக் கீரையையோ அல்லது வெந்தயத்தினையோ உணவில் சேர்த்து வரலாம்.வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை பருகலாம். சித்த மருத்துவமனைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தினை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரினைக் கொண்டு பிறப்புறுப்பினை கழுவி வரலாம். இளநீர் உடலை குளிர்ச்சியாக்கும் செய்கை உடையது. எனவே வெள்ளைப்படுதல் தொல்லை இருப்போர் இளநீர் பருகலாம்.

    வாரத்தில் 2 நாட்கள் தவறாது எண்ணெய் முழுக்கு செய்தல், பச்சை மிளகாய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்த்தல், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் சூட்டினை தவிர்க்க காட்டனிலான விரிப்பினை பயன்படுத்துதல் போன்றவை உடல் சூட்டினை கட்டுப்படுத்தி வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.

    இருப்பினும் கசிவுகள் நிறம்மாறி ஏற்பட்டாலோ, அதிகப்படியான துர்நாற்ற கசிவுகள் ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். சித்த மருத்துவத்தில் இதற்கான முறையான மருந்துகள் உள்ளன. மேலும் மாதவிடாய் காலத்தில் மாதுளை, ஆப்பிள் போன்ற பழவகைகள், உளுந்து களி, எள் உருண்டை, வெந்தயக் களி போன்ற சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×