என் மலர்
மேற்கு வங்காளம்
- பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது.
- பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார்.
கொல்கத்தா:
அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் பிரதமர் மோடியும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள்.
அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் வரும்போது எல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும் உண்டு. என்றாலும் அவை அவர்களது நட்பை ஒருபோதும் சீர் குலைப்பது இல்லை.
நட்பை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் விளையும் அதிக ருசிக்கொண்ட மாம்பழ வகைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக மாம்பழம் அனுப்புவதை மம்தா பானர்ஜி மறக்காமல் செய்து வருகிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று அவர் பிரதமர் மோடிக்கு மாம்பழம் பரிசு அனுப்பி வைத்தார். 4 கிலோ எடை கொண்ட பெட்டியில் அழகாக அலங்கரிக்கப்பட்டு அந்த மாம்பழங்கள் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது. அனுப்புபவர் முகவரியில் மம்தா பானர்ஜி , மேற்கு வங்காள முதல்-மந்திரி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். கிம்சாகர், பஸ்லி, லட்சுமண் பாக் ஆகிய 3 வகை மாம்பழங்கள் இந்த ஆண்டு பரிசு பெட்டியில் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் மோடிக்கு அனுப்பியது போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழ பெட்டிகளை பரிசாக அனுப்பி உள்ளார். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றி கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அடுத்த நாளே மாம்பழம் பரிசு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி போல வங்கதேச பிரதமர் ஷேக் ஹஜினாவும் ஆண்டு தோறும் இந்திய தலைவர்களுக்கு மாம்பழம் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு 2,600 கிலோ மாம்பழங்கள் அனுப்பி இருந்தார்.
- வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
- போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
கொல்கத்தா:
கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.
அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,
இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.
உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.
அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.
கொல்கத்தா :
ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநிலத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இதைப்போல விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு பணி வழங்குவதாக அவர் கூறினார்.
மேலும் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் பயணித்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்து நடந்த பகுதியை ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்காளத்தினரை பார்ப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஒடிசா செல்ல இருப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை (புதன்கிழமை) வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.
- மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவரின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி.
- அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி ருஜிரா.
மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவரின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி. நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி ருஜிரா. இவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல முறை பலகோடி ரூபாய் சுரங்க மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் இவர் இன்று கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு புறப்பட சென்றார். அப்போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
- ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'வந்தே பாரத்' என்ற பெயர் நன்றாக இருக்கிறது.
கொல்கத்தா :
ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் பலியானதாகவும், 1,175 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் இறந்ததாக ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளதை நம்ப முடியவில்லை.
மேற்கு வங்காளம் என்ற ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்களிலேயே 61 பேர் இறந்திருப்பதாகவும், 182 பேரை காணவில்லை என்றும் கூறும்போது, 275 பேர் பலி என்பதை எப்படி ஏற்பது? இந்த எண்ணிக்கை எப்படி நிற்கும்?
நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, 'துரந்தோ' எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்னுரிமை அளிப்பதை நிறுத்திவிட்டனர். 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில்களின் என்ஜின் மட்டும் தரமாக இருக்கிறதா?
'வந்தே பாரத்' என்ற பெயர் நன்றாக இருக்கிறது. ஆனால், மரக்கிளை முறிந்து விழுந்தபோது அந்த ரெயிலுக்கு என்ன ஆனது?
நான், நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் ரெயில்வே மந்திரிகளாக இருந்தபோது, விபத்துகளில் ஏராளமானோர் பலியானதாக இப்போது சொல்கிறார்கள்.
அதனால், இந்த துயரமான நேரத்திலும் நான் இதை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். புதிய சிக்னல் சாதனமும், ரெயில்கள் மோதலை தடுக்கும் சாதனமும் நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 61 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய 56 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்கள்; மேலும் 279 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 182 பேரை காணவில்லை.
நான் ரெயிவே மந்திரியாக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் என்ஜின்கள் குறிப்பிட்ட திறனுடன் உள்ளதா?
நான் ரெயில்வே மந்திரியாக இருந்த காலத்திலும், நிதீஷ் குமார் அல்லது லாலு பிரசாத் யாதவ் காலத்திலும் பலர் இறந்ததாக சில பிரிவினர் கூறுகின்றனர். நான் ரெயில்வே மந்திரியாக இருந்த காலத்தில் புதிய சிக்னல் அமைப்பு மற்றும் விபத்து தவிர்ப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
- மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி படுகாயமடைந்தர்வர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
- மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடக்கம்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது.
மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானார்ஜி செல்கிறார். ஹெலிகாப்டரில் புறப்பட்ட மம்தா சம்பட இடத்தில் நிலைமையை பார்வையிட உள்ளார்.பின்னர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தர்வர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
- மேற்கு வங்காளத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது.
- வெப்ப அலையால் அங்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகின்றன.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கோடை விடுமுறை முடிந்து மேல்நிலைப் பள்ளிகள் வரும் 5-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகள் 7-ம் தேதியும் திறக்கப்படும் என மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் மாநிலத்தில் கோடை வெயிலும், வெப்ப அலையும் நீடிக்கிறது. அங்கு இந்த மாதத்தின் முதல் பாதி வரை வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றார்.
- மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
- "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி பானர்ஜி பங்கேற்றார்.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினார். கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஹஸ்ரா சாலையில் இருந்து ரவீந்திர சதன் வரை நடைபெற்ற பேரணியில் "எங்களுக்கு நீதி வேண்டும்" என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையை ஏந்தியபடி, பானர்ஜி பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எங்கள் மல்யுத்த வீரர்களால் நாங்கள் பெருமைக்கொள்கிறோம். மல்யுத்த வீரர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இது உலகளவில் நாட்டின் நற்பெயரைக் கெடுத்துவிட்டது. எனது ஒற்றுமை அவர்களுடன் உள்ளது. அவர்களின் போராட்டத்தை தொடரச் சொன்னேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ் கட்சி தாவினார்.
- யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என சுகெந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.
மத்தியில் வலுவாக உள்ள பாஜகவை வரும் பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இதனை முன்மொழிந்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தல் முடிவுகள் இதற்கு அச்சாரமாக அமைந்துள்ளதாகவும், இந்த வெற்றி தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பேரோன் பிஸ்வாஸ், திடீரென ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, பெய்ரோன் பிஸ்வாசை திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் பக்கம் இழுத்திருருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார். மேலும், இது அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் ஆணைக்கு முற்றிலும் துரோகம் செய்வதாகும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் மீறுவதாக கூறியது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், "தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். மாநில கட்சிகளுக்கென சில கடமைகள் உள்ளன என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மேகாலயா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் மட்டுமே போட்டியிட்டோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டது. அப்போது, நாங்கள் அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை. அவர்களுக்கு ஆதரவளித்தோம்" என்றார்.
தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவர் சுகெந்து சேகர் ராய் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் மேலும் சில தலைவர்களும் காங்கிரசுக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வரும் நேரத்தில், முக்கியமான இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை மோதல் சலசலப்பை உருவாக்கி உள்ளது.