என் மலர்
    Beginning
    Beginning

    பிகினிங்

    Director: NA
    Editor: NA
    Camera: NA
    Music: NA
    Release: 2023-01-26
    OTT: NA
    படக்குழுவினர்
      Points:
      Week
      Rank
      Point
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      • Whatsapp
      • Telegram
      • Linkedin
      • Print
      • koo
      கதைக்களம்

      பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணை சிறப்பு குழந்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பிகினிங்.

      விமர்சனம்

      பிகினிங்

      நாயகன் வினோத் கிஷன் தனது தாய் ரோகினியுடன் வாழ்ந்து வருகிறார். வினோத் கிஷன், சிறப்பு குழந்தை என்பதால், அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு செல்கிறார். இந்த நிலையில், நாயகி கௌரி கிஷன், மூன்று நபர்களால் கடத்தப்படுகிறார். இவரை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு செல்கிறார்கள்.



      அங்கு இருக்கும் போனை வைத்து ஒரு நம்பருக்கு போன் செய்கிறார். அந்த அழைப்பு வினோத்துக்கு செல்கிறது. தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கௌரி கேட்க, என்ன செய்வதென்று தெரியாமல் வினோத் தடுமாறுகிறார்.



      இறுதியில் கௌரியை வினோத் காப்பாற்றினாரா? கௌரியை கடத்தக் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



      படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வினோத் கிஷனுக்கு பெரிய பாராட்டுக்கள். சிறப்பு குழந்தையாக நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலையும் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கௌரி, வினோத்துக்கு இணையாக போட்டிபோட்டு நடித்து இருக்கிறார். கோபம், அழுகை, தடுமாற்றம், பொறுமை என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். வினோத், கௌரி இருவரும் போன் பேசும் காட்சி ரசிக்க வைத்திருக்கிறது.



      ஆசியாவிலேயே முதல் முறையாக ஸ்பிளிட் ஸ்கிரீன் என்ற முறையில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகன் விஜயா. ஸ்பிளிட் ஸ்கிரீன் என்பது ஒரு திரையில் இரண்டு கதைகள் ஓடும். பிகினிங் திரைப்படத்தை ஆரம்பத்தில் எந்த கதையை பார்க்க வேண்டும் என்ற தடுமாற்றம் முதலில் வருகிறது. ஆனால், சில நிமிடங்களில் ஒரு திரையை மட்டுமே பார்க்க நம் கண்கள் சென்று விடுகிறது. அந்தளவிற்கு திரைக்கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார்கள். இந்த புதிய முயற்சிக்கு பெரிய பாராட்டுக்கள்.



      வீரகுமாரின் ஒளிப்பதிவுக்கு பெரிய கைத்தட்டல். அதுபோல் படத்தொகுப்பாளர் பிரேம் குமாருக்கும் பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம். இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பெரிய பலம் சேர்த்து இருக்கிறது. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.



      மொத்தத்தில் ‘பிகினிங்’ சிறப்பான தொடக்கம்.

      ×