search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் 9 மாதங்களில் 128 குழந்தை திருமணங்கள்:  13 குழந்தைகளின் கல்வியை தொடர ஏற்பாடு   -அதிரடி நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு
    X

    தருமபுரி மாவட்டத்தில் 9 மாதங்களில் 128 குழந்தை திருமணங்கள்: 13 குழந்தைகளின் கல்வியை தொடர ஏற்பாடு -அதிரடி நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு

    • குழந்தைகளின் பாதுகாப்பு கருதி குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.
    • 5 சிறுமிகள் பெற்றோரிடமிருந்து கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், பலர் வேலை தேடி ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்க ளுக்கும், கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும் செல்கின்றனர். இவர்கள், தங்களது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர்.

    இதனால், குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சமூக பாதுகாப்பு அலுவலர்கள், போலீசார் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்ந்து நடக்கிறது.

    குறிப்பாக மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல், செப்டம்பர் மாதம் வரை குழந்தை திருமணம் தொடர்பாக, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு 92 புகார்கள் வந்துள்ளன. இதில், 74 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், சமூக நலத்துறை நடவடிக்கையால் 36 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    திருமணம் நடந்த பிறகு 13 திருமணங்கள் கண்டறியப்பட்டு, 8 பேர் சிறுமியர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, கல்வியை தொடர வழிவகை செய்யப்ப ட்டுள்ளது. 5 சிறுமிகள் பெற்றோரிடமிருந்து கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக இதுவரை போலீசார் 18 போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×