search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடலூரில்  இன்று கோலாகலம் வள்ளலாரின் 200-வது அவதார தினவிழா   சன்மார்க்க சொற்பொழிவு
    X

    வள்ளலார் 200-வதுஅவதார தினத்தையொட்டி சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

    வடலூரில் இன்று கோலாகலம் வள்ளலாரின் 200-வது அவதார தினவிழா சன்மார்க்க சொற்பொழிவு

    • மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5- ந் தேதி அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்தார்,
    • வடலூர் தருமச்சாலையில் காலை 7 மணிக்கும், மருதூரில் 8 மணிக்கும் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823-ம் ஆண்டு அக்டோபர் 5- ந் தேதி அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்தார், இவர் சென்னை, வடலூர், பார்வதிபுரம், கருங்குழி ஆகிய இடங்களில் வாழ்ந்து மேட்டுக்குப்பத்தில் 1874 ம் ஆண்டு, ஜனவரி 30- ந்தேதிசித்திப் பெற்றார். இறைவன் ஒளி (ஜோதி)வடிவானவர் என உலகிற்கு உணர்ந்த, வடலூர் பார்வதிபுரத்தில் ஞானசபையை நிறுவி, மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகள் நீக்கிய ஜோதி தரிசனமும், ஆண்டு தோறும் தை மாத பூச நட்சரத்தன்றும் 7 திரைகள் நீக்கிய ஜோதி தரிசனம் காண்பித்தார். அன்று முதல் தொடர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது, மக்கள் பசி பிணி இல்லாமல், இதே வடலூரில் சத்திய தருமச்சாலையை உருவாக்கி அதன்மூலம் 3 வேளையும், அன்னதானம், (உணவு) தடையின்றிவழங்கப்பட்டு வருகிறது.

    இவர் ஜாதி, மதங்களை கடந்து, ஒற்றுமையுடன், வாழவேண்டும் கண்மூடிபழக்கமெல்லாம் மண்மூடி போக எனவும், கருணையில்லா, ஆட்சி கடுகி ஒழியட்டும் அறிவுறுத்தினார். இத்தகைய சிறப்புக்குரிய அருட்பிரகாச வள்ளலாரின் 200- வது பிறந்த தினம் இன்று (5 -ந்தேதி) கோலாகலமாக நடந்தது. இதையொட்டி வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லம், வள்ளலார் சித்திப் பெற்ற மேட்டுக்குப்பம், வடலூர் ஞானசபை, தருமச்சாலை ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்டது. இதில் வடலூர் தருமச்சாலையில் காலை 7 மணிக்கும், மருதூரில் 8 மணிக்கும் சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது, முன்னதாக மேற்கண்ட இடங்களில் ஒருவார காலம், அருட்பா முற்றோதல் நடைபெற்றது,தொடர்ந்து தருமச்சாலை மேடையில், சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

    Next Story
    ×