என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதியமான் கோட்டை அருகே திறந்தவெளி கிடங்கில் ெநல் மூட்டைகள் இருப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
7000 நெல் மூட்டைகள் காணாமல் போன விவகாரம்: குற்றபுலனாய்வு அதிகாரிகள் ஆய்வு
- நெல் காணாமல் போனதாக வந்த தகவலை அறிந்து திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விசாரிக்க வந்தனர்.
- அட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும் ஒருசில அட்டிகளில் குறைவாகவும் மூட்டைகள் உள்ளதாகும் தெரிவித்தனர்.
தருமபுரி,
குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் காமினி உத்திரவின்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, சேலம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் அதியமான் கோட்டை அருகே அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கில் 7000 டன் நெல் காணாமல் போனதாக வந்த தகவலை அறிந்து திறந்தவெளி நெல்சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விசாரிக்க வந்தனர்.
அப்போது ஏற்கனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விழிப்புபணி (விஜிலென்ஸ்) அலுவலர் லோகநாதன் தலைமையிலான துணை மேலாளர் கமலக்கண்ணன் மற்றும் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் அட்டிகளை கணக்கெடுத்ததில் அட்டி கணக்கு சரியாக உள்ளதாகவும், அட்டிகளில் உள்ள மூட்டைகளின் எண்ணிக்கையில் ஒரு சில அட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும் ஒருசில அட்டிகளில் குறைவாகவும் மூட்டைகள் உள்ளதாகும் தெரிவித்தனர்.
அதனால் கடந்த பிப்ரவரி முதல் டெல்டா மாவட்டங்களில் இருந்து வாங்கப்பட்ட நெல்லின் அளவிலிருந்து அரவைமில் முகவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெல் போக மீதமுள்ள நெல்லை இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் அரவை மில் முகவர்களுக்கு அரவைக்காக ஏற்றி அனுப்பிய பிறகு தான் மூட்டைகள் குறைகிறதா இல்லையா என கண்டறிய இயலும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.