என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பரமத்திவேலூர் அருகே வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்
  X

  பரமத்திவேலூர் அருகே வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுப்பை யன் (வயது 55 ). இவரது மனைவி யோகேஸ்வரி (47). இவர்களுக்கு 2013-ம்ஆண்டு திருமணம் நடைபெற்றது.
  • ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானது.

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பை யன் (வயது 55 ). இவரது மனைவி யோகேஸ்வரி (47).

  இவர்களுக்கு 2013-ம்ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுப்பையனுக்கு கை நடுக்கம் இருந்துள்ளது. மேலும் மனவளர்ச்சி குன்றியவராகவும் இருந்து வருகிறார். இதேபோல் யோகேஸ்வரியும், ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானது.

  இந்நிலையில் யோகேஸ்வரி மாமியார் பாப்பாயி, நேற்று காட்டு வேலைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது, காலையில் இருந்து வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பாப்பாத்தி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு மர்மமான முறையில் யோகேஸ்வரி இறந்து கிடந்துள்ளார்.

  இதுகுறித்து பரமத்தி போலீசில் யோகேஸ்வரியின் தாய் ராஜேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×