என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்ததை படத்தில் காணலாம்.
பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
By
மாலை மலர்2 Feb 2023 9:37 AM GMT

- திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சரவணன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
- தாயும் சேயும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கருக்கையைச் சேர்ந்தவர் மணி இவரது மனைவி மீனா (வயது 30) நிறை மாத கர்ப்பிணி. இந்நிலையில் இவருக்கு நேற்று இரவு 7 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அப்போது செம்மேடு அருகே வந்தபோது திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சரவணன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்ஸ் அவசர கால ஊழியர் ஆம்புலன்ஸில் மீனாவிற்கு பிரசவம் பார்த்தார். அதில் மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும் சேயும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story
×