என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தனியார் பள்ளியில் ஆண்டு விழா; போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
  X

  பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

  தனியார் பள்ளியில் ஆண்டு விழா; போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.
  • சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  தரங்கம்பாடி:

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியின் 20-வது ஆண்டு விழா நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கினார்.

  விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளருமான நிவேதா எம்.முருகன், ஒன்றிய குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், கமலஜோதி தேவேந்திரன், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோ ர்கள் கலந்து கொண்டனர்.

  சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  Next Story
  ×