search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவமனைக்கு பேருந்து வசதி  செய்ய கோரிக்கை
    X

    அரசு மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்ய கோரிக்கை

    • அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து
    • அரசு மருத்துவமனைக்கு பேருந்து வசதி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கடந்த 26.7.1960 அன்று தொடங்கப்பட்டு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் அரியலூர் மாவட்டம் கடந்த 23.11.2007 அன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இம்மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அரியலூர் மாவட்ட கிராமங்களில் உள்ள 4,53,000 மக்களுக்கு மருத்துவச் சேவையினை ஆற்றி வருகிறது.

    தற்போது அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படடுள்ளதால், மாவட்ட தலைமை மருத்துவமனை ஜெயங்கொண்டத்துக்கு மாற்றப்பட்டு, தற்போது அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையாக செயல்பட்டு வருகிறது.பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், மகப்பேறு சிறப்புப் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு நிதியுதவித் திட்டம், அவசரச் சிகிச்சைப் பிரிவு எனப் பல்வேறு பிரிவுகள் மருத்துவமனையில் தற்போது உள்ளன. 24 மணிநேரமும் (சிப்ட்) முறையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.108 இலவச ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் அரியலூர், செந்துறை, திருமானூர், தா.பழூர், வி.கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 6 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் நாள்தோறும் பிரசவம், விஷக்கடி, இருதய நோய் என உயிருக்குப் போராடும் மக்கள் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை மூலம் குணபடுத்தப்படுகின்றன.

    இம்மருத்துவமனையில் வசதிகள் இருந்தும், நோயாளிகள் சென்று வர பேருந்து வசதிகள் கிடையாது. அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர் செல்லும் ஒரு சில நகரப் பேருந்துகள் மட்டுமே மருத்துவமனையாக வழியாக செல்கிறது. மற்றப்படி விரைவுப் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக சென்று வருகிறது.இதனால், அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் நோயாளிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றால் ரூ.300 செலவாகிறது. எனவே, நோயாளிகள், பொதுமக்களின் நலன் கருதி பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு பேருந்து வசதியினை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×