என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அழகு கலை பயிற்சி பெற எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு அழைப்பு
  X

  அழகு கலை பயிற்சி பெற எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு அழைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அழகு கலை பயிற்சி பெற எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
  • 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

  அரியலூர்:

  சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தில் தாட்கோ சார்பில் நடைபெறும் அழகு கலை பயிற்சி பெற விரும்பும் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று

  அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள ெசய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக பல்வேறு அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம், சுய தொழில் செய்யவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

  இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி காலம் 45 நாள்களாகும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சிக்கான அனைத்து செலவும் தாட்கோவால் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு அங்கீகார தரச்சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இப்பயிற்சியை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் பெறவும், மற்றும் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்யவும் தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

  இப்பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×