search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு
    X

    அரியலூர் மாவட்டத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு

    • அரியலூர் மாவட்டத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் பீடி, சிகரெட், மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது

    அரியலூர்,

    உலக புகையிலை இல்லா தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில் ஏலாக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட புகையிலை தடுப்பு திட்ட சமூகப் பணியாளர் வைஷ்ணவி, திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் ஆகியோர் ஹான்ஸ், பீடி, சிகரெட், மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்.

    பின்னர் அனைவரும் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் நடராஜன், மக்கள் நல பணியாளர் ஜோதிமணி, பணித்தள பொறுப்பாளர்கள் வெண்ணிலா, சங்கீதா மற்றும் கிராம பொதுமக்கள், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சிவராமன் செய்திருந்தார். இதே போல் அரியலூரை அடுத்த சிறுவளூர் கிராமத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து தலைமை வகித்தார்.

    கருப்பூர் பொய்யூர் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பழனியம்மாள், வார்டு உறுப்பினர் பூங்காவனம், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, ஆசிரியர் கோகிலா, இளநிலை உதவியாளர் மணிகண்டன், ஊராட்சி செயலர் மாரிமுத்து மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் நல பணியாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×