என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தருமபுரி ரெயில் நிலையத்தில்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் லிப்ட் வசதி
  X

  தருமபுரி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் லிப்ட் வசதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த ரெயில் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
  • நடைமேடை பாலத்தில் ஏரி 2 வது பிளாட்பாரத்திற்கு இறங்கி செல்வதால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்டோர் சிரமப்படு கின்றனர்.

  தருமபுரி,

  தென் மாவட்டங்களில் இருந்து சேலம் தருமபுரி வழியாக கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும், வட மாநிலத்தில் இருந்து தருமபுரி வழியாக தென் மாவட்டங்களுக்கும், தினசரி ெரயில்கள் சென்று வருகின்றன.

  இதில் தினசரி எக்ஸ்பிரஸ் 12 ெரயில்களும், வா ராந் திர எக்ஸ் பிரஸ் 6 ெரயில் களும், தினசரி பேசஞ் சர் 6 ெரயில் களும் என மொத் தம் தினசரி 24 ெரயில் கள் சென்று வரு கின் றன.

  இந் த நிலை யில் தரு மபுரி யில் இருந்து தென் மாவட் டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் மற்றும் வட மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அதிகமான பயணிகள் ெரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.

  குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி இரு மார்க்கத்திலும் வரும் எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயிலையும் மற்றும் ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோவையில் இருந்து குருலா வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ெரயிலையும், தருமபுரியில் இருந்து விடியற்காலை 5 மணிக்கு பெங்களூர் புறப்படும் குஸ்புல் ெரயில்களையும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

  தருமபுரி ெரயில் நிலையத்தில் மூன்று பிளாட்பாரங்களும் மற்றும் சரக்கு ெரயில் நிற்பதற்காக தனி வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து பயணிகள் ெரயிலும் காலதாமதம் இன்றி செல்வதற்கு முதல் பிளாட் பாரத் திற்கு வரா மல் இரண் டாவது பிளாட் பாரத் தில் வந்து நின்று செல் கின் றன.

  அத னால் பயணி கள் முதல் பிளாட் பாரத்தை கடந்து இரண் டாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடை பாலத்தில் ஏரி 2 வது பிளாட்பாரத்திற்கு இறங்கி செல்வதால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்டோர் சிரமப்படு கின்றனர்.

  இதை கருத்தில் கொண்டு ெரயில்வே நிர்வாகம் பொது மக்களின் வசதிக்கேற்ப புதிதாக ரூ.40 லட்சம் செலவில் லிப்ட் வசதி செய்வதற்காக நடவடிக்கை எடுத்து வந்தது.

  அதன் அடிப்படையில் மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த லிப்ட் அமைக்கும் பணி முடிந்த நிலையில் மக்களின் பயன்பாட்டிற்காக இன்னும் இரண்டு வாரங்களில் வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

  Next Story
  ×