search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், கல்லூரியில் அறிவியல் கண்காட்சி- கலெக்டர் பங்கேற்பு
    X

    அறிவியல் கண்காட்சியில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    திருவாரூரில், கல்லூரியில் அறிவியல் கண்காட்சி- கலெக்டர் பங்கேற்பு

    • மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலத்தில் இயங்கி வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், மற்றும் மகரிஷி சிபிஎஸ்இ பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து தேசிய கணிதம் மற்றும் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கல்பாக்கத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பாக மாபெரும் கண்காட்சி கடந்த 31 மற்றும் 01-ம் தேதி நடைபெற்றது.

    இவ்வாராய்ச்சி மையமானது தங்களுடைய அணு சக்தியின் மூலம் பல விதமான பயணிக்கிகளைக் கொண்டு இயங்கி வருவதன் பலனை விவரித்தார்கள்.

    மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ/மாணவிகள் கண்காட்சிகளும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இடம்பெற்று இருந்தது, மேலும் அறிவியல் மற்றும் கணிதத்தின் முக்கியத்துவத்தை கணினி திரை மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்கள், முன்னதாக இக்கண்காட்சியினை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து இருந்து சேந்தமங்கலம் வரை மாணவ மாணவிகளின் விழிப்புணர் பேரணி நடைபெற்றது, மேலும் அறிவியல் மற்றும் கணிதம் துறை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றது,

    இ்வ் விழாவினை, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், கல்லூரியின் தாளாளர். வெங்கடராஜலு, தொடங்கி வைத்தார்.

    விழாவின் முக்கிய விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் ஸ்ரீனிவாசன், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் ஜலஜாமதன்மோகன் (IGCAR) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 6000 மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    கண்காட்சி பொருட்களையும் அதன் செயற்பாட்டையும் மிக துள்ளிமாக அதன் உறுப்பினர்கள் பார்த்திபன், ராமன் ஆகியோர் விவரித்தனர்.

    திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இதன் பயன்பாட்டை நன்கு அறிந்து இவ்விதமான செயல்களை ஊக்குவிக்கும் வண்ணம் இருந்ததாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி குழுமத்தை பாராட்டினார்கள்.

    இவ்விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது,

    இவ் விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள், இவ் நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர், விஜயசு ந்தரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளியின் முதல்வர் சிவ குருநாதன், கலைமகள், சுமித்திரா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், முனைவர் தமிழன்பன், நிர்மல், பாக்கியலட்சுமி ஆனந்தி, நெ ல்லிவனம், அருள் மேரி, முருகானந்தம், விஜயராகவன், நாகராஜன், ஜெகதீஷ், சுனில், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×