என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
சாதனை படைத்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட காட்சி.
தடகள போட்டியில் தித்தியோப்பனஅள்ளி அரசு பள்ளி மாணவிகள் சாதனை
By
மாலை மலர்7 Oct 2022 9:30 AM GMT

- மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர்.
- அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் பங்கேற்ற பென்னாகரம் ஒன்றியம், தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்துள்ளனர்.
16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நீளம் தாண்டுதலில் இந்த பள்ளியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி நவ்யா 3-வது இடமும், 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஹரிணி 3-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் ராமன், லட்சுமணன், ஊர் பொதுமக்கள், ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×