search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் மத்திய அரசு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - கலெக்டர் தகவல்
    X

    மயிலாடுதுறையில் மத்திய அரசு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - கலெக்டர் தகவல்

    • மயிலாடுதுறையில் மத்திய அரசு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பியூன், கேட் கீப்பர்கள், காவலாளி, ஜுனியர் ஆபரேட்டர், உட்பட 11 ஆயிரத்து 409 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுனர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்சன் கமிசன் பல்வகை பணியாளர் பணிக்கு ஆபரேட்டர், பியூன், கேட் கீப்பர்கள், காவலாளி, ஜுனியர் ஆபரேட்டர், தோட்டக்காரர் ஹவல்தார் உட்பட 11 ஆயிரத்து 409 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் 17.2.2023 ஆகும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மேற்கண்ட மத்திய அரசு பணி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், படிக்க வேண்டிய பாடங்கள், இலவச பயிற்சி வகுப்புகள், பாடக்குறிப்புகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    மயிலாடுதுறை பூம்புகார் சாலை பாலாஜி நகர் 2-வது குறுக்குதெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து இணைய வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

    Next Story
    ×