search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் பண்டிகையால்  தருமபுரியில் காய்கறிகள் விலை உயர்வு
    X

    தொடர் பண்டிகையால் தருமபுரியில் காய்கறிகள் விலை உயர்வு

    • அனைத்து கீரை வகைகளும் தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செயல்படுகிறது.
    • காய்கறிகளின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் காய்கறிகள் அதிகப்படியாக சாகுபடி செய்து வருகின்றனர். கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், சுரைக்காய், புடலங்காய், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், தக்காளி, உள்ளிட்ட பலவகை காய்கறிகளும் அனைத்து கீரை வகைகளும் தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செயல்படுகிறது.

    இந்த மாவட்டத்தில் விளையும் காய்கறிகளை மொத்த வியாபாரிகள் மூலமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் பெங்களூருக்கும் செல்கிறது. மேலும் தருமபுரி மாவட்ட வேளாண் துறை மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளுக்கும் உழவர்களால் நேரடி விற்பனை செய்யப்படுகிறது.

    தற்பொழுது தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் காய்கறிகளின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து வரும் சனிக்கிழமை நாட்களில் இந்துக்கள் விரதம் இருந்து தங்களது வீடுகளில் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு காணிக்கையாக உண்டியல் வைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த பூஜையை புரட்டாசி மாதத்தில் வரும் 3 வது சனிக்கிழமையன்று விசேஷமாக கொண்டாடி வருகின்றனர்.

    நாளை புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இன்று முன்கூட்டியே உழவர் சந்தையில் குவிந்தனர். காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தாலும் பண்டிகைகளுக்கு தேவையான கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், முள்ளங்கி, வாழைக்காய், முருங்கை கீரை, உள்ளிட்ட காய்கறி வகைகளை வாங்கிச் சென்றனர். கிலோ 30 ரூபாய் விற்பனை செய்த முருங்கைக்காய் இன்று கிலோ 97 ரூபாய் வரைக்கும், வெளிமார்க்கெட்டில் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வகை காய்கறிகளும் உழவர் சந்தையில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .தொடர் பண்டிகை வரும் காலங்களிலும் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

    Next Story
    ×