search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் பகுதியில் கலெக்டர் ஆகாஷ் ஆய்வு
    X

    விஸ்வநாதப்பேரி ரேசன் கடையில் கலெக்டர் ஆகாஷ் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    வாசுதேவநல்லூர் பகுதியில் கலெக்டர் ஆகாஷ் ஆய்வு

    • தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாசுதேவநல்லூர் அரசு புறம்போக்கு ஆகிய இடங்களை பார்வையிட்டு விலைமதிப்பு மிக்க அரசு புறம்போக்கு நிலங்களில் முள்வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தார்
    • விஸ்வநாதப்பேரி ஊராட்சி பூவானி குளம் சாலை முதல் சுப்பிரமணியபுரம் சாலை வரை ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆகியவற்றை பார்வையிட்டார்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வாசுதேவநல்லூர், நாரணபுரம், திருமலாபுரம், விஸ்வநாதப்பேரி ஆகிய இடங்களில் உள்ள பவுண்டு தொழு, களம் புறம்போக்கு, அரசு புறம்போக்கு ஆகிய இடங்களை பார்வையிட்டு விலைமதிப்பு மிக்க அரசு புறம்போக்கு நிலங்களில் முள்வேலி அமைத்து பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். மேலும் வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம், யூனியன் அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து விஸ்வநாதப்பேரியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், பஞ்சாயத்து அலுவலகத்திற்காக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம், ரேசன் கடை, சுகாதார வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 14 -வது நிதிக்குழு விஸ்வநாதப்பேரி ஊராட்சி பூவானி குளம் சாலை முதல் சுப்பிரமணியபுரம் சாலை வரை ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள தார் சாலை ஆகியவற்றை பார்வையிட்டார். உடன் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் வள்ளி, கிராம நிர்வாக அலுவலர் பாலகணேஷ், வாசு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன், யூனியன் பொறியாளர் அருள் நாராயணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராமசாமி, விஸ்வை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், செயலர் உமாமகேஸ்வரி, மக்கள் நல பணியாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×