search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பணிகள் தொடக்கம்
    X

    மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்,கே.ஈச்சம்பாடி ஊராட்சி பள்ளம்பட்டி கிராமத்தில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது.

    அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பணிகள் தொடக்கம்

    • இந்த கட்டிடத்தில் தொடர்ந்து பள்ளி இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம்,கே.ஈச்சம்பாடி ஊராட்சி பள்ளம்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 28 மாணவ மாணவிகளுடன்,ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு உதவி ஆசிரியருடன் இயங்கி வந்தது.

    இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்தும்,மேற்கூரை பெயர்ந்தும் காணப்பட்டதால் இந்த கட்டிடத்தில் தொடர்ந்து பள்ளி இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் ஊர் பொதுமக்கள் உதவியுடன் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 1 -ம் வகுப்பு முதல் 3 -ம் வகுப்பு வரையிலும், ஊர் கோவில் வளாகத்தில் 4 -ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்புகளும் பாடம் நடத்தி வந்தனர்.

    இதனால் பள்ளி குழந்தைகளுக்கு சுதந்திரமாக கல்வி கற்கும் சூழல் இல்லாமல் போனது. மேலும் கழிவறை வசதிகள் இன்றியும், மழை மற்றும் வெயில் காலங்களில் கல்வி கற்க சிரமப்பட்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. அதை தொடர்ந்து இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் தமிழ்நாடு அரசு ரூ.31 லட்சம் மதிப்பில் பள்ளம்பட்டி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன், துணை தலைவர் வன்னிய பெருமாள்,மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் இன்பசேகரன்,சுகந்தி,கே.ஈச்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர்சாந்தி வெள்ளையன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கோவிந்தசாமி,கே.ஈச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நாராயணன்,கே.ஈச்சம்பாடி ஊராட்சி செயலாளர் செந்தில்குமார்,பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

    Next Story
    ×