என் மலர்
உள்ளூர் செய்திகள்

வலைதளத்தில் அவதூறு: வக்கீல் மீது போலீசில் புகார்
- தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்
- போலீஸ் நிலையம் எதிரில் சத்திய சீலனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
விழுப்புரம்:
வாட்ஸ் அப் குரூப்பில் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன். வக்கீல். அவர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவர் தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை பற்றி வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார். இதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் செஞ்சியை சேர்ந்த வக்கீல்கள் செஞ்சி போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் மனு அளித்தனர்.
மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் எதிரில் சத்திய சீலனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதில் வக்கீல்கள் கிருஷ்ணன், சக்தி ராஜன், புண்ணியகோட்டி, எவான்ஸ், மணிகண்டன், பிரவீன், சக்திவேல்,பாலசுப்ரமணியன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story