என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்
    X

    விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுமார் 8 லட்சம் ஏக்கரிலான நெற்பயிர்கள் கனமழையில் நனைந்து வீணாகியுள்ளதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு செலவு செய்த நிலையில் நெற்பயிர்களின் சேதத்தால் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 8 லட்சம் ஏக்கரிலான நெற்பயிர்கள் கனமழையில் நனைந்து வீணாகியுள்ளதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் அளவுக்கு செலவு செய்த நிலையில் தற்போது நெற்பயிர்களின் சேதத்தால் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.

    தமிழக அரசு, மழையினால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×