என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
- வீரபாண்டி போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீரபாண்டி :
திருப்பூர் பல்லடம் சாலை சுண்டமேடு அம்பேத்கர் நகர் 7வது வீதியை சேர்ந்தவர் சின்னான் ( வயது 65). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில வருடங்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நெஞ்சு வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் பல்லடம் சாலை வித்தியாலயம் பஸ் நிறுத்தம் பகுதியில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சின்னான் தற்கொலை குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story