search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், நாளை மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி- கருத்தரங்கம்
    X

    கலெக்டர் மகாபாரதி.

    சீர்காழியில், நாளை மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி- கருத்தரங்கம்

    • சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • மதிப்பு கூட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெறுகிறது.

    வேளாண்மை யில் பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய பயிர்களின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் நாளை
    (30-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    இதில் பாரம்பரிய பயிர் ரகங்களின் சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.

    எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×