search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடவாசலில் இருந்து கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றினால் போராட்டம்- இரா.காமராஜ் எம்.எல்.ஏ.
    X

    இரா.காமராஜ் எம்.எல்.ஏ.

    குடவாசலில் இருந்து கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றினால் போராட்டம்- இரா.காமராஜ் எம்.எல்.ஏ.

    • அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • குடவாசல் பகுதியிலேயே கல்லூரி கட்டுவதற்கான போதிய இடம் உள்ளது.

    திருவாரூர்:

    நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்ப–தாவது:-

    எனது கோரிக்கையை ஏற்று, 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடவாசலுக்குக் கல்லூரியை வழங்கினார்.

    குடவாசல் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தரப் பகுதி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட கல்லூரி குடவாசல் பகுதியிலேயே தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் அனைவரின் கருத்தாகும்.

    மாறாகத் தவறான தகவல்களைச் கூறி குடவாசல் தொகுதியை விட்டு கல்லூரியை வெளியில் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இது ஒரு தவறான முன்னுதாரணம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிக்குப் புதிய கட்டிடம் கட்டுவற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    ஆனால் நீதிமன்ற வழக்கின் காரணமாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.

    குடவாசல் பகுதியில் இடம் கொடுப்பதற்கு பல நிலச் சொந்தகாரர்கள் முன் வந்திருக்கிறார்கள். குடவாசல் பகுதியிலேயே கல்லூரி கட்டுவதற்கான போதிய இடம் உள்ளது.

    குடவாசல் பகுதியை விட்டு கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவு செயல்படுத்தப்பட்டால், மாணவர்கள், பொது மக்களுடன் இணைந்து, தலைமையேற்று நானே போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    தேர்வுக்குத் தயாராக வேண்டிய நிலையில், தற்போது குடவாசல் கல்லூரி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    உடனடியாக அரசு அதிகாரிகள், குடவாசல் பகுதியிலேயேக் கல்லூரிக்–கானக் கட்டிடம் கட்டப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் மாணவர்கள் தேர்வுக்குத் தயாரக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×