search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு; கோடை உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்
    X

    கோடை உழவு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறப்பு; கோடை உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்

    • கடந்த ஆண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் ஆற்றுப் பாசனத்தை நம்பியும், 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்பொழுது மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவிப்பையடுத்து கோடை உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 1 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆகையால் குருவை சாகுபடி பணிகள் சீராக நடைபெற உதவிடு வகையில் வேளாண் கிடங்குகள் மூலமாக 50 சதவீதம் மானியத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குறிப்பாக கடந்தாண்டு சம்பா அறுவடை நேரத்தில் மழை பெய்து மிகப் பெரிய அளவில் விவசாயிகள் பொருளாதார நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    ஆகையால் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் சாகுபடி பணிகளை செய்து முடிக்கும் வகையில் தங்கு தடையின்றி மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதுபோன்று திறந்து விடப்படும் தண்ணீர் ஆறுகளில் மட்டும் சென்று கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும்.

    ஆறுகளில் இருந்து பாசனத்திற்காக பிரியும் சிறு, குறு வாய்க்கால்களிலும் செல்வதற்கான சூழ்நி லையை ஏற்படுத்த வேண்டும்.

    அவ்வாறு தண்ணீர் சென்றால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படும்.

    ஆகையால் சிறு, குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும்.

    மேலும் நிபந்த னை இல்லாமல் வேளாண் கடன்கள் வழங்க வேண்டும்.

    இவைகளை குறையின்றி செய்வதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×