என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா
    X

    கண்ணப்ப நாயனார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடைபெற்ற கண்ணப்பனார் குருபூஜை விழாவில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

    புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. சிவபெருமானுக்கு கண் கொடுத்தவரும், மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த 63 நாயன்மார்களில் ஒருவருமான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கண்ணப்பநாயனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் புதிய காசி விஸ்வநாதர், கண்ணப்ப நாயனார் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குருபூஜை விழாவிற்கு இருக்கூர் பட்டக்காரரும், இடும்பை இளைய நாயகருமான சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர் கலந்து கொண்டார்.

    விழாவில் பாண்ட மங்கலம் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணப்ப நாயனார், புதிய காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×