search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமுட்டம் துறைமுகத்தில் ஒரு மாதமாக முடங்கி கிடக்கும் 5 ரோந்து படகுகள்
    X

    சின்னமுட்டம் துறைமுகத்தில் படகு ஓட்டுனர்கள் இல்லாமல் முடங்கி கிடக்கும் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான அதி நவீன ரோந்து படகுகளை படத்தில் காணலாம் 

    சின்னமுட்டம் துறைமுகத்தில் ஒரு மாதமாக முடங்கி கிடக்கும் 5 ரோந்து படகுகள்

    • கேள்விக்குறியாகும் கடலோர பாதுகாப்பு
    • 5படகுகளுக்கும் ஓட்டுனர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    கடல்வழியாக தீவிரவாதிக ள் ஊடுருவுவதை தடுக்க வும் கடத்தலை தடுக்கும் பொருட்டும் கடல் மற்றும் கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சார்பில் "சாகர் கவரச்", "சஜாக்"போன்ற ஆப்ரேஷன் பெயரில் அதி நவீன ரோந்து படகு மூலம் கடலில் தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடத்தப்பட்டு வருகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் இந்திய கடலோர காவல் படையும் இணைந்து மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் இந்த ஆபரேஷனை மேற்கொள்வது வழக்கம். கன்னியாகுமரியை பொறுத்தமட்டில் இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது மட்டுமின்றி இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கின்ற இடமாக திகழ்கிறது. மேலும் இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் உள்ளது.

    மேலும் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவைகளை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மாதந்தோறும் "சஜாக்" ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபடுகின்றனர். இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர், போன்ற முக்கிய வி.ஐ.பி.க்கள் வரும்போது "சாகர் கவாச்" போன்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றனர்.

    இதற்காக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சின்னமுட்டம் துறைமுகத்தில் 4 அதிநவீன ரோந்து படகுகளை நிறுத்தி வைத்து உள்ளனர். இதில் ஒரு படகில் சின்னமுட்டத்தில் இருந்து கூடங்குளத்திற்கு ஒரு குழுவும், இன்னொரு படகில் உவரிக்கு மற்றொரு குழுவும், 3-வது படகில் குளச்சலுக்கு ஒரு குழுவும், 4-வதுபடகில் நீரோடிக்கு மற்றொரு குழுவுமாக தனித்தனியாக பிரிந்து சென்று அதி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள்.

    அதேபோல குமரி மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலோர பகுதிகளில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் வாக னங்களில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடி களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.அதுமட்டுமின்றி கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனம் மூலமும் தீவிர ரோந்தில் ஈடுபடுவது உண்டு.

    இந்த நிலையில் ஒரு வருடத்துக்கான ஒப்பந்த அடிப்படையில் நிய மிக்கப்பட்ட ரோந்து படகு ஓட்டுனர்களின் பதவி காலம் கடந்த டிசம்பர் மாதம் 21-ந்தேதியுடன் முடிவ டைந்து விட்டது.இதனால் கடந்த ஒருமாத காலமாக படகு ஓட்டுனர்கள் இல்லாமல் 4 அதிநவீன படகுகளும் சின்ன முட்டம் துறைமுகத்தில் முடங்கி கிடக்கின்றன. இதில் 2 படகுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதுதவிர ஒரு படகு கரையேற்றி பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது.

    இதனால் கடலோர பாதுகாப்புகுழும போலீ சாருக்கு கன்னியா குமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடல் வழியாக அதிநவீனரோந்து படகு மூலம் பாதுகாப்பு ஒத்திகை நடத்தமுடியாத அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால்கடலில் ரோந்து செல்லபயன்படுத்தப்படும் 4 அதிநவீன ரோந்து படகுகளும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஓய்வெடுக்கின்றன.

    இதுபோன்ற நிலை தொடர்ந்தால் இதனை அறிந்து கொண்டு தீவிர வாதிகள் ஊடுருவ முயற்சிக்கலாம். அதன்வழி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது.அதே போல் கடத்தல் பேர் வழிகளும் தங்கள் கைவரிசையை முழுவீச்சில் மேற்கொள்வார்கள். எனவே கடலோர பாதுகாப்பு கேள்விக்குறியாகும் இந்த நிலைமையை உடனடியாக மாற்றி தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தொடர்ந்து கடல்வழியாக அதிநவீன ரோந்து படகு மூலம் கண்காணிப்பு பணியினை முழுவீச்சில் மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கு வசதியாக படகு ஓட்டுனர்கள் இல்லாமல் நிற்கும் 5படகுகளுக்கும் ஓட்டுனர்களை உடனடி யாக நியமிக்க வேண்டும் என்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×