search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்
    X

    கோப்பு படம் 

    கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்

    • கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுக வேண்டுகோள்
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருவ மழை காலங்களில் வெள்ளம் , புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவர்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாத்திடும் வகையில் முதல் அமைச்சர் உத்தரவின்படி 2022 - 2023-ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு வரவு - செலவு திட்டத்தில் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் கும்பப்பூ பருவத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெற்பயிருக்கு வருகிற 15.12.2022 தேதி வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 515 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே , கும்பப்பூ பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிருக்கு தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகளில் 1 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களில் ( இ - சேவை மையங்கள் ) தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள " விவசாயிகள் கார்னரில் " நேரிடையாக காப்பீடு செய்யலாம் . முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம் , கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ - அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் பயிர்களை சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே தங்களது பயிரை காப்பீடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியை www.pmfby.gov.in அணுகவும். வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×