search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் விபத்தில் சாவு
    X

    குலசேகரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் விபத்தில் சாவு

    மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற மகன் மீது போலீசார் வழக்கு

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 44), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரிய கொரட்டி பிறீடா (40). இவர்களுக்கு ஜான் பிஜோ (17), ஜான் பினோ (7) என 2 மகன்கள் உள்ளனர்.

    ஜான் போஸ்கோ தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருவதால், தற்போது அப்பகு தியிலுள்ள வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மேக்காமண்ட பத்தில் தனது தாய் இறந்த தால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மரிய கொரட்டி பிறீடா மகன்களுடன் அங்கு தங்கி இருந்தார்.

    நேற்று அவர், கணவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தனது மகன் ஜான் பிஜோவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்ததால், ஜான் பிஜோ திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இந்த விபத்தில் மரிய கொரட்டி பிறீடா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய கொரட்டி பிறீடா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஜான் பிஜோ லேசான காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கடையாலுமூடு குழிக்கால விளையை சேர்ந்த தபசிமுத்துவிடம் (55) விசாரணை நடத்தினர்.

    குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று மரிய கொரட்டி பிறீடாவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பி றகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற ஜான் பிஜோ மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×