search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி
    X

    கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி

    • கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • இதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் மா விளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக் கடன் ெசலுத்தினர்.
    கரூர்,


    கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 19-ந் தேதி பூச்சொரிதல், 21-ந் தேதி காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் மா விளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக் கடன் ெசலுத்தினர். 29-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவையொட்டி நேற்று மதியம் கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து கம்பத்துக்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பம் ஆற்றுக்கு செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையோரத்தில் காத்திருந்து கம்பததை தரிசனம் செய்தனர். அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் கம்பம் விடப்பட்டது. பின்னர் அமராவதி ஆற்றில் வானவேடிக்கை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, எஸ்.பி. சுந்தரவதனம், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், கோல்ட் ஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன், தீபா கண்ணன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராமசாமி, சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் நிரேஷ் கண்ணன், பழனி முருகன் ஜுவல்லரி பாலமுருகன், எஸ்.எஸ்.பாலிகிளினிக் டாக்டர் செந்தில் ஆண்டவன், விகேஏ பால் கருப்பண்ணன், கே.எம்.பி.மஹால் செந்தில்குமார், கல்யாண சக்கரவர்த்தி கேஸ் அங்கமுத்து , கே.எஸ். மெஸ் ராஜேந்திரன், திருமலா ஜுவல்லரி சுப்பிரமணி, மதன் கார்ஸ் மதன்குமார், பரமேஸ்வரி கேஸ் ரமேஷ், சாஸ்தா சீட்ஸ் செந்தில்குமார், கரூர் மாநகராட்சி 9-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு, பா.ஜ.க. மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார், வி.கே புட்வேர் தாந்தோணி குமார், கரூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெங்கடேஸ்வரன், வள்ளுவர் கல்லூரி நிறுவனர் செங்குட்டுவன், கரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் பேங்க் சுப்பிரமணி, கரூர் அன்பு கரங்கள் சேகர், வழக்கறிஞர் கரிகாலன், ஹோட்டல் சுப்பண்ணா ரவிச்சந்திரன், சுஜித், கரூர் மனநல மைய மருத்துவர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், புகழூர் நகராட்சி தலைவர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விசா.சண்முகம், 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) தண்டபாணி, ஸ்ரீ சண்முக ஜுவல்லரி சுப்பிரமணியன், இன்ஜினியர் நல்லுசாமி, ஜெய பிரதீக், கரூர் மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் சேரன் பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசாமி, சேரன் பஸ் சர்வீஸ் ராஜேந்திரன், ஸ்ரீ டிராவல்ஸ் முருகேசன், கரூர் பயிற்சி மையத்தின் நிறுவனர் ரமேஷ், உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×