என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தையுடன் தாய் மாயம்
- கணவர் போலீசில் புகார்
- குழந்தையுடன் தாய் மாயமானார்
கரூர்,
கரூர், வடக்கு காந்தி கிராமம், ஜே.ஜே.,கார்டன் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவருக்கு, கண்மணி (27) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கண்மணி, இளைய பெண் குழந்தை அனுஷ்காவை அழைத்துக் கொண்டு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், அதன் பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும் பிவரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவர் வசந்தகுமார், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story