என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் புதிய கிளை தொடக்கம்
  X

  இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் புதிய கிளை தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
  • பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் லீலா சங்கர் நன்றி கூறினார்.

  ஊட்டி,

  நீலகிரி மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் கிளை அமைப்பான ஜூனியர் ரெட்கிராஸ் பிரிவு, ஊட்டியை அடுத்த நஞ்சநாடு கப்பத்தொரை ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ரங்கநாதன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட தொடர்பு அலுவலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆசிரியை சத்யாதேவி அனைவரையும் வரவேற்றார்.நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர் கேப்டன் மணி ஆலோசனையில் நடைபெற்ற இந்த விழாவில், நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தா குரூஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர் அமைப்பான ஜூனியர் ரெட்கிராஸ் பிரிவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செல்வி, ரம்யா மற்றும் மீனா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் லீலா சங்கர் நன்றி கூறினார்.

  Next Story
  ×