என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு
  X

  பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வனவிலங்குகளை வேட்டையாட வைத்த சுருக்கு கம்பியில் சிறுத்தை சிக்கியது தெரியவந்தது.
  • சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுத்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

  ஊட்டி:

  நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திச்சால் பகுதியில் உள்ள தோட்டத்தில் கடந்த 1-ந் தேதி சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

  இதனை கவனித்த பொதுமக்கள் இதுபற்றி சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

  அதன்பேரில் வனசரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனர். அப்போது சிறுத்தை ஆக்ரோஷத்துடன் உறுமியது. இதையடுத்து சிறுத்தையை மீட்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர் சச்சின் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

  அப்போது வனவிலங்குகளை வேட்டையாட வைத்த சுருக்கு கம்பியில் சிறுத்தை சிக்கியது தெரியவந்தது.

  அதைத்தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார், எருமாடு கால்நடை டாக்டர் சரண்யா ஆகியோர் மயக்க ஊசி போட்டு 3 வயதுடைய பெண் சிறுத்தையை மீட்டு முதுமலை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

  மேலும் இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தோட்ட உரிமையாளர் அனீஸ்ராஜன் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

  மேலும் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுத்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.

  இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக திட்டதுணை இயக்குநர் வித்யா மேற்பார்வையில் கால்நடைகள் டாக்டர்கள் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் சிறுத்தையின் உடல் அந்தப்பகுதியில் எரியூட்டப்பட்டது.

  Next Story
  ×