என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அண்ணாவின் கோட்பாடுகளை உண்மையாக கடைபிடிக்கும் கட்சி அ.தி.மு.க.-ராஜன் செல்லப்பா பேச்சு
  X

  அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம். அருகில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட பலர் உள்ளனர்.

  அண்ணாவின் கோட்பாடுகளை உண்மையாக கடைபிடிக்கும் கட்சி அ.தி.மு.க.-ராஜன் செல்லப்பா பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அண்ணாவின் 54-வது நினைவுநாளையொட்டி திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • நிகழச்சியில் அண்ணாவின் கோட்பாடுகளை உண்மையாக கடைபிடிக்கும் கட்சி அ.தி.மு.க. தான் என்று அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா பேசினார்.

  திருப்பரங்குன்றம்

  முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 54-வது நினைவுநாளை யொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  இந்த நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தார். கட்சியின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

  கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க அண்ணா வின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  கட்சியின் 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கூத்தியார் குண்டு பகுதியில் 52 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைக்க உள்ளார்.

  இந்த நிகழ்ச்சியில் புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

  தி.மு.க. எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது மட்டுமே மக்களை பற்றி கவலைப்படும். ஆளுங்கட்சியான பிறகு மக்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும் வாடிக்கை. ஆனால் அ.தி.மு.க. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், மக்க ளுக்கான திட்டங்க ளையும், மக்களுக்கான போராட்டங்களையும் நடத்தும் கட்சியாக உள்ளது. அண்ணாவின் கோட்பாடு களை உண்மையாக கடை பிடிக்கும் கட்சியாக அ.தி.மு.க. மட்டுமே உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் பன்னீர் செல்வம், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், பாலா, நாகரத்தினம், பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பாலமுருகன், மாணவரணி பகுதி செயலாளர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×