என் மலர்
உள்ளூர் செய்திகள்

எண்ணூர் விரைவு சாலையில் லாரியில் இருந்து கொட்டிய ஆயிலால் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
- எண்ணூர் விரைவு சாலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வது வழக்கம்.
- இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் ஆயிலில் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர்.
சென்னை:
சென்னை எண்ணூர் விரைவு சாலையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வது வழக்கம். நேற்று இரவு கே.வி.கே. குப்பம் அருகே எண்ணூர் விரைவு சாலையில் சென்ற லாரியில் உள்ள டேங்கில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டு ஆயில் கொட்டியது. அந்த நேரத்தில் பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் ஆயிலில் வழுக்கி விழுந்து காயம் அடைந்தனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் நிலை தடுமாறினர்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் தலைமை காவலர் பாலாஜி ஆகியோர் எண்ணூர் விரைவுச் சாலையில் கொட்டி இருந்த ஆயிலில் மணலை கொட்டி சீரமைத்தனர்.
Next Story