search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
    X

    திருச்செங்கோடு தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

    • திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு,
    • 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழாவை முன்னிட்டு, நாளை 3-ந் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்களுக்கு, 4 ரத வீதியில் பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்யக்கூடாது.

    தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சங்ககிரி ரவுண்டானா அருகிலுள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும். 4 மற்றும் 5-ந் தேதிகளில், சங்ககிரி ரவுண்டானாவில் இருந்து வேலூர் மற்றும் ஈரோடு மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சேலம் ரோடு, மலை சுத்தி ரோடு, வாலரைகேட் வழியாக செல்ல வேண்டும். வாலரை கேட்டிலிருந்து நாமக்கல், சேலம், சங்ககிரி செல்லும் வானங்கள் மலைசுத்திரோடு வழியாக செல்ல வேண்டும்.

    தேர் திருவிழாவின் போது நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திருச்செங்கோடு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற, ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பழமை வாய்ந்த திருத்தேரின் நன்மையைக் கருதி, பக்தர்கள் தேரின் மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியவில்லை.

    எனவே பக்தர்கள் அனைத்து பூஜைகளையும், திருத்தேரின் முன்பாக செய்து, சாமி தரிசனம் செய்து அருள்பெருமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×