search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் பெரியகுளம் தனியார் பார்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
    X

    தனியார் பார்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் பெரியகுளம் தனியார் பார்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

    • 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விலை அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டது.
    • மதுபாட்டில்கள் தரம் மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் இயங்கி வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் பல்வேறு பிரச்சினைகளால் மூடப்பட்டது. இதேபோல் வடுகபட்டியில் இருந்த டாஸ்மாக் கடையும் பொதுமக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டது.

    இதனால் பெரியகுளம் பகுதி குடிமகன்கள் தேவ தானப்பட்டி, ஜெயமங்கலம், தேனி பகுதி டாஸ்மாக் கடைகளுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

    பெரியகுளத்தில் வைகை அணை சாலையில் ஒரு பார், தேனி சாலையில் 2 பார் என மொத்தம் 3 தனியார் மது பானக்கடைகள் இயங்கி வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் மது வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் குடிமகன்கள் இந்த 3 கடைகளிலேயே மது வாங்கி செல்கின்றனர். இதனால் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படு வதாக குற்ற ச்சாட்டு எழுந்தது. மேலும் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விலை அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டது.

    சில நேரங்களில் மேலும் கூடுதலாக பணம் வசூலிக்க ப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தனலட்சுமி ெபரியகுளம் பகுதியில் உள்ள 3 தனியார் மது பானக்கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். மதுபாட்டில்கள் தரம் மற்றும் அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். அப்போது பெரியகுளம் வட்டாட்சியர் காதர்ஷரிப், தென்கரை இன்ஸ்பெக்டர் ஜெயச்ச ந்திரன் மற்றும் வருவா ய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×